சேலத்தில் மாற்றுக்கட்சியினர் 150க்கும் மேற்பட்டோர் அதிமுக இணைவு
சேலத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, 150க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுக கட்சியில் இணைந்தனர்.;
சேலம் ஓமலூர் புறநகர் அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சேலம் மாநகராட்சி 59வது டிவிசன் பகுதியை சேர்ந்த கொண்டலாம்பட்டி பகுதி திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் முனீஸ்வரன் தலைமையில் திமுக, அமமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக கட்சியில் இணைந்தனர்.
கட்சியில் இணைந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றார். இதில் மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் செம்மலை, மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.