12 கிராம மக்களுக்கு புதிய ரேசன் கார்டுகளை வழங்கிய எம்எல்ஏ

தாரமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 12 கிராம மக்களுக்கு புதிய ரேசன் கார்டுகளை சேலம் பாமக எம்.எல்.ஏ அருள் வழங்கினார்.

Update: 2021-08-20 10:45 GMT

புதிய ரேசன் கார்டுகளை சேலம் பாமக எம்எல்ஏ அருள் வழங்கினார். 

சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கே ஆர் தோப்பூரில் வசிக்கும் 12குக்கிராம மக்களுக்கு புதிய ரேசன் கார்டுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கருக்கல்வாடி கிராமத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஓமலூர் வட்ட வழங்கல் அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் பாப்பா கணேசன் முன்னிலை வகித்தார். இந்த விழாவில் சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு புதிய ரேசன் கார்டுகளை வழங்கினார்.

தொடர்ந்து பயனாளிகளிடையே உரையாற்றினார். அதில் குடும்ப தலைவராக பெண்கள் இருந்தால் தான், உரிமைத்தொகை ஆயிரம் வழங்கப்படும் என்று தவறான பிரச்சாரம் செய்யபடுகிறது. ஆனால் குடும்ப தலைவராக ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தகுதியுள்ள அனைவருக்கும் உரிமை தொகை  வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் முதியோர் உதவித்தொகை, புதிதாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏற்கனவே விடுபட்டவர்களுக்கும் வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். அதனால் தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணபங்களை ஆன்லைனில் பதிவு செய்து வழங்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். 

Tags:    

Similar News