மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, 12,400 கன அடியில் இருந்து 11,400 கன அடியாக குறைந்தது.;
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 120 அடியாக உள்ளது. நீர்இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு 12,400 கன அடியில் இருந்து 11,400 கன அடியாக குறைந்துள்ளது .
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் அணை மற்றும் சுரங்க மின்நிலையம் வழியாக, வினாடிக்கு 11,000 அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக, வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.