சேலத்தில் ராமர் பாதத்தை வணங்கி ஆசி பெற்ற எடப்பாடி பழனிச்சாமி

சேலம் ஓமலூரில், ராமர் பாதத்தை வணங்கி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆசி பெற்றார்.

Update: 2021-10-27 08:15 GMT

ஓமலூரில் ராமர் பாதத்தை வணங்கி ஆசி பெற்ற எடப்பாடி பழனிச்சாமி.

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள மாவட்ட புறநகர் கட்சி அலுவலகத்தில்,  அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, இன்று ஆலோசனை நடத்தினார். இதில், மாநகராட்சி தேர்தல் சம்பந்தமாக விவாதித்தார். ஆலோசனை நடத்தி  விட்டு வெளியே வரும்போது,  அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு பல்வேறு ஆறுகளில் எடுத்த புனித தீர்த்தம் மற்றும் ராமர் பாதம் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தது.

உடனே, ராமர் பாதத்தை வணங்கி ஆசி, எடப்பாடி பழனிச்சாமி ஆசி பெற்றார். இந்த தீர்த்தமானது காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியார் அவர்களால் துவங்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளில் பூஜை செய்து,  பின்னர் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு எடுத்து செல்லப்பட உள்ளது.

Tags:    

Similar News