சேலத்தில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை

சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Update: 2021-11-11 08:00 GMT

சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநில கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் செம்மலை, அதிமுக மாநகர், பேரூராட்சி, ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அதிமுக பேரூராட்சி, நகராட்சி, மாநகர் மாவட்ட செயலாளர் உடனான ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புறநகர் மாவட்ட கழக அவைத் தலைவராக பணியாற்றி வந்த குருசாமி கடந்த 6ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.

முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்கும் வகையில் திமுக அரசு தொடர்ந்து செயல்படுவது கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த மாதம் தமிழகத்தில் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் ஆளும் திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தையும் அத்துமீறல்களையும் அடாவடித்தனத்தையும், கைகட்டி வேடிக்கை பார்த்த மாநில தேர்தல் அதிகாரிகளையும் காவல் துறையினரையும் சேலம் புறநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தமிழகம் எங்கும் வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற பணிகள் வரும் 13,14 ஆகிய இரு நாட்கள் மற்றும் இம்மாத இறுதி 27 மற்றும் 28 ஆகிய இரு நாட்கள் என்று மொத்தம் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

அது சமயம் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் முழு ஈடுபாட்டோடு ஈடுபடுவதுடன், முகவரி மாறிய வாக்காளர்கள் மற்றும் இறந்த வாக்காளர்களை நீக்குவது ஆகிய பணிகளை மேற்கொள்வதுடன் தகுதி உள்ள அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடைபெற உள்ள பேரூராட்சி மற்றும் நகராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் 100 சதவீத வெற்றி என்ற குறிக்கோளை அடைவதற்கான வழிகளை இப்பொழுது ஆரம்பிக்க வேண்டும் என்று கழக செயல்வீரர்களை சேலம் புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், மேட்டூர் அணை 120 அடியை  எட்டியவுடன் அதன் வெள்ள உபரி நீரை சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடி நிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு  நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு 565 கோடி மதிப்பில் பணியினை செயல்படுத்தும் வண்ணம் அதிமுக கழக ஆட்சியில் எனது தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்றது.

இதற்கான முதற்கட்ட பணிகள் முடிவடைந்து இவ்வாண்டு பிப்ரவரி மாதம் திப்பம்பட்டி பிரதான நிலையத்திலிருந்து நீர் ஏற்றப்பட்டு அங்கு உள்ள ஆறு ஏரிகள் நிரப்பும் வகையில் இத்திட்டத்தின் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்வாண்டு கடந்த சில தினங்களாக மேட்டூர் அணை  120 அடிகள் எட்டிய நிலையில் இதுவரை மேட்டூர் அணையில் இருந்து வெள்ள உபரி நீரை சரபங்கா வடி நிலத்தில் உள்ள 100 ஏரிகளுக்கு  நீரேற்று பாசனம் மூலம்  தண்ணீரை திறந்து விடாத இந்த  திமுக அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News