சேலம் ஓமலூர் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சேலம் ஓமலூர் கட்சி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
சேலம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து சேலம் புறநகர் மாவட்ட அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் உடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சேலம் மாநகராட்சியில் 60 கோட்டங்கள், 31பேரூராட்சிகள் ஆகியவற்றில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதில் அமைப்பு செயலாளர் செம்மலை, மற்றும் ஓமலூர், ஆத்தூர், கெங்கவல்லி, சங்ககிரி, ஏற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர்.