மோசடி வழக்கில் கைதான எடப்பாடி பழனிசாமி உதவியாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி

மோசடி வழக்கில் கைதான எடப்பாடி பழனிசாமி உதவியாளரின் ஜாமீன் மனு சேலம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-12-07 05:30 GMT

எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளராக இருந்த மணி .

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணி என்பவர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தை பெற்று கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி விட்டதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அடுத்தடுத்து புகார்கள் வந்தது.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் உத்தரவின் பேரில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி மணி மற்றும் அவரது கூட்டாளி செல்வகுமார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் மணியை கடந்த வாரம் தனிப்படை போலீசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். மேற்கொண்டு இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள செல்வகுமாரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜாமீன் கேட்டு மணி சேலம் 6 ஆவது நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கலைவாணி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News