சேலத்தில் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

சேலத்தில் குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழும் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி மாற்றுத்திறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு பெட்ரோல் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயற்சி

Update: 2021-09-20 07:15 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த மாற்றுத்திறனாளியை மீட்கும் போலீசார்.

சேலம் ஓமலூர் அருகே உள்ள ஊ.மாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு(30), காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான இவர் இவரைப் போன்ற மாற்றுத்திறனாளி பெண்ணான வசந்தா(28) என்பவரை கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவருக்கும் ஏழு வயதில் மகன் உள்ளார்.

இதனிடையே கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக கணவரை பிரிந்து வசந்தா அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில்  மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பிய தங்கராசு, குடும்பம் நடத்த வருமாறு நேரில் சென்று அழைப்பு விடுத்த நிலையிலும் வராததால் விரக்தியில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழும் மனைவி சேர்த்து வைக்க கோரி, தங்கராசு பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீர் ஊற்றி மீட்டனர். பின்னர் சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News