காளியம்மன் கோவிலில் கொலுசு அணிந்து நடப்பது போன்று கோவிலுக்குள் தொடர்ந்து சத்தம் கேட்பதால் மக்கள் பக்தி பரவசத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சேலம் காடையம்பட்டி தாலுக்காவில் உள்ள குழந்தைநகர் பகுதியில் எழுந்தருளியுள்ள 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு காளியம்மன் திருக்கோவிலில் நேற்று காலை 11 மணி முதல் கோவிலுக்குள் கொலுசு அணிந்து நடப்பது போன்று சத்தம் தொடர்ந்து கேட்டு வருவதால் மக்கள் பக்தி பரவசத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கொலுசு சத்தத்தை கேட்பதற்காக கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு சென்று பார்த்து வருகின்றனர். தொடர்ந்து கொலுசு சத்தம் கேட்ட நிலையில் 20 நிமிடங்கள் இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் தொடர்ந்து சத்தம் கேட்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா காரணமாக கடந்தாண்டு கோவில் பண்டிகை நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது திடீரென சாமி நடமாடுவதாக மக்கள் கூறுகின்றனர்.