சேலம் மாவட்டத்தில் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் இன்று நிறுத்தம்

சேலம் மாவட்டத்தில் தட்டுப்பாடு காரணமாக அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் இன்று நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-06-30 06:00 GMT

சேலம் மாவட்டத்தில் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் இன்று நிறுத்தம் 

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை முழுவதுமாக கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் 135 மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு கோவாக்சின், கோவிசீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி கையிருப்பு ஏதும் இல்லாததால் இன்றைய தினம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மையங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் தடுப்பூசி போட ஆர்வத்துடன் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சேலம் மாவட்டத்திற்கு இதுவரை வந்த 7 லட்சத்து 38 ஆயிரத்து 340 தடுப்பூசிகள் அனைத்தும் காலியாகிவிட்டதால் சென்னையில் இருந்து தடுப்பூசி வந்தால் மட்டுமே மீண்டும் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News