தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் புதிய தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆனது நடைபெற உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியான பட்டதாரிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பணி வாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம். அதற்கான தகவல்களை இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி குழுமம் சார்பாக கீழே வழங்கியுள்ளோம்.
நாட்டில் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையினை போக்க மத்திய/ மாநில அரசுகளும் பல்வேறு நிறுவனங்களுடன் தொழில் முதலீட்டு மாநாடு போன்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. படித்தும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து உள்ளனர். இந்நிலையில் சமீப காலமாக கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு உத்தரவு அறிவித்தது. அதன் காரணமாக பலரும் தங்களின் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.
இதனால் வேலையில்லா திண்டாட்டத்தின் நிலை அதிதீவிரமாக உள்ளது. இன்னும் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த இரண்டாம் அலையின் தாக்கத்தினால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு ஆனது இன்னும் அமலில் உள்ளது. இது போன்ற சிக்கல்களுக்கு தீர்வு காண தற்போது சேலம் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பல்வேறு துறைகளை சார்ந்த தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
மத்திய அரசின் இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்த தகவல்களை இன்ஸ்டாநியூஸ் வழிகாட்டி குழுமம் சார்பாக கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அதனை நன்கு அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.
மத்திய அரசின் தேசிய தொழில் சேவை பிரிவில் இருந்து பல்வேறு தனியார் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட முகாம் நடைபெற உள்ளது. தற்போதுய் கொரோனா காலகட்டம் என்பதனால் பாதுகாப்பு கருதி இந்த முகாம்கள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெற உள்ளது.
காலியிடங்கள் – ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பலதரப்பட்ட நிறுவனங்களில் காலியாக உள்ளது.
கல்வித்தகுதி – 10ம் வகுப்பு தேர்ச்சி முதல் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் வரை அனைவரும் முறையாக கலந்து கொள்ளலாம்.
முகாம் நடைபெறும் நாள் – ஜூன் 18,19,25 மற்றும் 26
முகாம் நடைபெறும் நேரம் – காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி இவ்வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
முகாம் நடைபெறும் இடம் – முகாம் ஆன்லைனிலேயே நடைபெற உள்ளது. அதற்கான வழிமுறைகளை கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம். இதில் பங்கு பெரும் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்புகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளதால் தகுதியானவர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.