மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 5,000 கன அடியாக குறைப்பு
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு 5000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
மேட்டூர் அணையில் இன்று மாலை 4.30 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 72.68 அடியாக உள்ளது. நீர்இருப்பு 35.04 டி.எம்.சி யாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 9,018 கன அடியாக உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த தண்ணீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியிலிருந்து தற்போது 4.30 மணி முதல் 5 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.