மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.09 அடியாக குறைவு: நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.09 அடியாக குறைந்துள்ளது. நீர்வரத்து சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம், வெளியேற்றம் குறித்து பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது. இன்று (12ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 76.09 அடியாக குறைந்துள்ளது.
நீர்இருப்பு 38.17 டி.எம்.சி.,யாக குறைந்துள்ளது. நீர்வரத்து அணைக்கு வினாடிக்கு 110,510 கன அடியிலிருந்தது 10,529 கன அடியாக அதிகரித்துள்ளது.
டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மழை அளவு 10.40 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.