மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு; நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 72.69 அடியிலிருந்து 73.83 அடியாக உயர்ந்தது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம், வெளியேற்றம் குறித்து பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது. (7ம் தேதி) இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 72.69 அடியிலிருந்து, 73.83 அடியாக உயர்ந்தது.
நீர்இருப்பு 36.08 டி.எம்.சி.,யாகவும், நீர்வரத்து அணைக்கு வினாடிக்கு 22,076 கன அடியிலிருந்து 17,712 கன அடியாக குறைந்துள்ளது.
டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.