மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,251 கன அடியிலிருந்து 10,858 கன அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 111.08 அடியிலிருந்து, 111.68 அடியாக உயர்ந்தது. நீர்இருப்பு 79.95 டி.எம்.சி யிலிருந்து 80.81 டி.எம்.சியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,251 கன அடியிலிருந்து 10,858 கன அடியாக குறைந்துள்ளது.
டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடியாக அதிகரித்தது தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மழை அளவு 10 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.