மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 978 கன அடியிலிருந்து 874 கன அடியாக சரிவு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 978 கன அடியிலிருந்து 874 கன அடியாக சரிந்துள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 111.69 அடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு 80.833 டிஎம்சியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 978 கன அடியிலிருந்து, 874 கன அடியாக குறைந்தது.
டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 8,000 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.