மேட்டூர் அணையிலிருந்து நீர் வெளியேற்றம் 28,000 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையிலிருந்து நீர் வெளியேற்றம் 28,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-14 06:15 GMT

மேட்டூர் அணை.

மேட்டூர் அணையின் இன்று காலை 10.40  மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 120.00 அடி , நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து 25,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

அணையிலிருந்து வெளியேற்றமானது காவிரியில் விநாடிக்கு 24,000 கன அடியிலிருந்து, 28,000 கன அடியாக அதிகரிப்பு. 16 கண் பாலம் வழியாக 11,000 கன அடியாகவும், அணை சுரங்க மின் நிலையம் வழியாக 17,000 கன அடியாகவும் வெளியேற்றப்படுகிறது. கால்வாய் வழியாக 150 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News