மேட்டூர் அணையில் நீர் வெளியேற்றம் 17,180 கன அடியாக குறைப்பு
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 17,180 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் இன்று மாலை 4 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 119.09 அடியாகவும், நீர்இருப்பு 92.03 டி.எம்.சியாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 26,440 கன அடியிலிருந்து, 22,538 கன அடியாக குறைந்துள்ளது.
காவிரி ஆற்றில் விநாடிக்கு 20,000 கன அடியிலிருந்து 17,180 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்குக் மேற்கு கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.