மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது

மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 81.21 அடியிலிருந்து 80.49 அடியாக குறைந்தது.

Update: 2021-08-04 03:15 GMT

மேட்டூர் அணை. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 81.21 அடியிலிருந்து 80.49 அடியாக குறைந்தது. நீர்இருப்பு , 42.44 டி.எம்.சி. யாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,690 கன அடியிலிருந்து 6,308 கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து நீர் வெளியேற்றம்,  டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு 14,000 கன அடி  தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 500 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News