மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 108.43 அடி
மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 108.43 அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.;
மேட்டூர் அணையின் இன்று காலை 8 நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 108.43 அடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு 76.19 டிஎம்சியாக சரிந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 884 கன அடியிலிருந்து 903 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 750 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.