மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 15,409 கன அடியாக சரிவு

மேட்டூர் அணையில் நீர்வரத்து 15,409 கன அடியாக குறைந்துள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-10-20 03:15 GMT

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 93.50 அடியாகவும், நீர்இருப்பு 56.74 டி.எம்.சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,012 கன அடியிலிருந்து 15,409 கன அடியாக குறைந்துள்ளது.

டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 550 கன அடி  தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News