மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 28,650 கன அடியாக சரிவு
மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 28,650 கன அடியாக குறைந்து வருகிறது என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 99.68 அடியாகவும், நீர்இருப்பு 64.42 டி.எம்.சியாகவும்ப உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 39,634 கன அடியிலிருந்து 28,650 கன அடியாக குறைந்துள்ளது.
டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 550 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.