மேட்டூரில் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத் தேவைக்காக திறக்கப்படும், தண்ணீரின் அளவு 8 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணையின் இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி,
அணையின் நீர்மட்டம் : 65.69 அடியாக குறைந்துள்ளது.
நீர்இருப்பு : 29.10 டி.எம்.சியாக குறைந்துள்ளது.
நீர் வரத்து : வினாடிக்கு 5,353 கன அடியிலிருந்தது 5,712 கன அடியாக அதிகரித்துள்ளது.
வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று நண்பகல் 12 மணி முதல் 8 ஆயிரம் கன அடியாக குறைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.