மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 750 கனஅடி நீர் திறப்பு
குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 750 கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம்: 108.44 அடியாகவும், நீர்இருப்பு 76.21 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து : வினாடிக்கு 884 கன அடியாக உள்ளது.
அணையிலிருந்து நீர் திறப்பு: குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 750 கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்காக காவிரியில் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் கடந்த 28 ஆம் தேதி நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது குடிநீர் தேவைக்காக மட்டும் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.