51 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்த தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்
வீரக்கல் புதூர் பேரூராட்சியில் 51 வாக்குகள் பெற்று தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்;
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே வீரக்கல் புதூர் பேரூராட்சி 1ஆவது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சீனிவாசன் 51 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் இதே வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் டெய்சிராணி 23 வாக்குகளும், தம்மிராஜ் சுயேசை வேட்பாளர் 38 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் மணி 35 வாக்குகளும், முருகன் பா.ம.க. வேட்பாளர் 14 வாக்குகளும், அ.ம.மு.க. கட்சி வேட்பாளர் விக்னேஷ் 8வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்துள்ளனர்.