மேட்டூர் அணியின் நீர்மட்டம் 89அடியாக உயர்வு: நீர்வரத்து 12,099 கன அடி

மேட்டூர் அணியின் நீர்மட்டம் 89 அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து 12,099 கன அடியாக உள்ளது.;

Update: 2021-10-16 03:30 GMT

மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, நீர்மட்டம்  88.13 அடியிலிருந்து 89 அடியாக உயர்ந்தது. நீர்இருப்பு 50.54 டி.எம்.சி.,யிலிருந்து 51.51 டி.எம்.சி.,யாக அதிகரித்துள்ளது.

அணியின் நீர் வரத்து வினாடிக்கு 15,757 கன அடியிலிருந்து, 12,099 கன அடியாக குறைந்துள்ளது.

டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு  100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 550 கன அடி  தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News