மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, 5,455 கன அடியாக குறைந்துள்ளது.;

Update: 2021-06-26 03:09 GMT

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு அதிகரித்தது. இதனால், சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, கடந்த சில நாட்களாக, அதிகரித்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, 88.61 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு : 51.07 டி.எம்.சி. ஆக உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,035 கன அடியில் இருந்து, 5,455 கன அடியாக குறைந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின்  அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக உள்ளது.

Tags:    

Similar News