மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90.68 அடி
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, 90.68 அடியாக உள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, 90.68 அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு : 53.43 டி.எம்.சி.யாக உள்ளது.
காவிரியில் இருந்து அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 605 கன அடியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக உள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.