மேட்டூர் அணையின் நீர்மட்டம் 74.71 அடியாக உயர்வு: நீர்வரத்து தொடர்ந்து குறைவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 74.71 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து குறையத்தொடங்கியுள்ளது.

Update: 2021-09-08 02:30 GMT

பைல் படம்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம், வெளியேற்றம் குறித்து பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.  இன்று (8ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 73.83 அடியிலிருந்து, 74.71 அடியாக உயர்ந்தது.

நீர்இருப்பு 36.88 டி.எம்.சி.,யாகவும், நீர்வரத்து அணைக்கு வினாடிக்கு 17,712 கன அடியிலிருந்து 15,166 கன அடியாக குறைந்துள்ளது.

டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News