மேட்டூர் அணையில் நீர்வரத்து 15,479 கன அடியாக சரிவு: நீர்மட்டம் 81.47 அடி

மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரங்கள் குறித்து பொதுப்பணித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

Update: 2021-10-11 03:00 GMT

மேட்டூர் அணை.


மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 81.47 அடியாகவும், நீரிருப்பு 43.43 டி.எம்.சி.,யாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 16,163 கன அடியிலிருந்து, 15,479 கன அடியாகக் குறைந்துள்ளது.

டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News