மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
மேட்டூர் அணையின் இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் : 85.35 அடியாகவும், அணையின் நீர் இருப்பு : 47.49 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,130 கன அடியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 15,000 கன அடியாக உள்ளது.
நீர் வரத்தை விட, பாசனத்திற்கு வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.