மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,804 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு 4,181 கன அடியிலிருந்து 12,804 கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2021-07-19 03:02 GMT

கர்நாடகாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், காவிரி நீர்பிடிப்புப்பகுதிகளில் கனமழை பெய்து, கர்நாடக  அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, காவிரியில் திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 71.87 அடியில் இருந்து 72.61 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்இருப்பு 34.98 டி.எம்.சி.யாக உள்ளது.

மேட்டூர்அணைக்கு காவிரியில் இருந்து நீர் வரத்து வினாடிக்கு 4,181 கன அடி என்றிருந்தது, தற்போது 12,804 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு  5,000 கன அடி  தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News