டெல்டா மாவட்டங்களில் கனமழை: மேட்டூர் அணையில் நீர்திறப்பு குறைப்பு
டெல்டா மாவட்டங்களில் மழை பெய்வதால், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் இன்று மதியம் ஒருமணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 74.810 அடியாகவும், நீர்இருப்பு 36.979 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து, வினாடிக்கு 2,535 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இதனிடையே, தற்போது டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, இன்று மதியம் ஒரு மணியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 8 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.