மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 686 கன அடியில் இருந்து, 2,376 கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2021-06-23 04:20 GMT

கர்நாடக அணைகளில் அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம்  89.36 அடியாகவும், அணையின் நீர் இருப்பு : 51.92 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 686 கன அடியில் இருந்து, 2,376 கன அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக உள்ளது.

Tags:    

Similar News