மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,988 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணை நீர்வரத்து 3,802 கன அடியில் இருந்து 3,988 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 116.22 அடியாக உள்ளது. நீர்இருப்பு : 87.56 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து : வினாடிக்கு 3,802 கன அடியில் இருந்து 3,988 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.