மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 119.64 அடியாக சரிவு

மேட்டர் அணையின் நீர்மட்டம் , இன்று காலை நிலவரப்படி, 120 அடியில் இருந்து 119.64 அடியாக சரிந்துள்ளது.

Update: 2021-12-25 02:45 GMT

சேலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி  நிலவரப்படி,  120 அடியில் இருந்து 119.64 அடியாக குறைந்தது. அணையின் நீர்இருப்பு, 92.89 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,953 கன அடியிலிருந்து 4,178 கன அடியாக அதிகரித்துள்ளது . 

அணையில் இருந்து, உபரி நீர் திறப்பு அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 10,000  கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News