மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு 19,068 கன அடியில் இருந்தது 28,394 கன அடியாக அதிகரித்துள்ளது.;
கோப்பு படம்
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 85.17 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு, 47.30 டி.எம்.சியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு 19,068 கன அடியில் இருந்தது 28,394 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து, டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக, வினாடிக்கு 650 கன அடியில் இருந்து வினாடிக்கு 550 கன அடியாக குறைத்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை பகுதியில், மழை அளவு 13. 20 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.