மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு 1000 கனஅடியாக குறைப்பு
மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு, 1000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 1000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் இன்று நண்பகல் 2 மணி நிலவரப்படி நீர்மட்டம் : 75.63 அடியாக உள்ளது. நீர்இருப்பு : 37.74 டி.எம்.சி உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 12118 கன அடியாக உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வந்த தண்ணீரின் அளவு, பிற்பகல் 2 மணி முதல் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியில் இருந்து 1000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.