மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 7000 கனஅடியாக குறைப்பு

டெல்டா பாசன தேவைக்காக, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 7000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-20 07:30 GMT

கோப்பு படம்

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி,   72.97 அடியாக இருந்தது. அணையின் நீர்இருப்பு 35.30 டி.எம்.சி. ஆக உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு  12,112 கன அடியில் இருந்தது 10,277  கன அடியாக  குறைந்துள்ளது.

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 16,000 கன அடி வீதம் வெளியேற்றப்பட்ட தண்ணீரின் அளவு,  காலை 11:00 மணி முதல் 7,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 750 கன அடி  தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News