மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து, 1,071 கன அடியில் இருந்து, 2,535 கன அடியாக அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 76.41 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு, 38.47 டி.எம்.சி. ஆக உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு 1,071 கன அடியில் இருந்து, 2,535 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.