மேட்டூர் அணை உபரி நீர் மூலம் மின் உற்பத்தி துவக்கம்

மேட்டூர் அணையின் உபரி நீர் மூலம் மின் உற்பத்தி துவங்கியுள்ளது.

Update: 2021-11-10 03:15 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை 119 அடியை எட்டியுள்ள நிலையில்,  நேற்று முதல்,  மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு திறக்கப்பட்டுள்ள 20 ஆயிரம் கனஅடி உபரிநீர்,  அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையம் வழியாக வெளியேற்றப்படுகிறது . 

இதனால், அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையம் மற்றும் செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிக் கோட்டை, குதிரைக்கல்மேடு உள்ளிட்ட 7 கதவணைகளில் மின்உற்பத்தி துவங்கியது. அணை மின்நிலையத்தில் 50 மெகாவாட், சுரங்க மின்நிலையத்தில் 200 மெகாவாட், செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிக்கோட்டை, குதிரைக்கல் மேடு உட்பட 7 கதவணைகளில் தலா 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News