மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு 500 கனஅடி தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு 500 கனஅடி தண்ணீர் திறப்பு.
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் : 82.53 அடியிலிருந்து 81.89 அடியாக குறைந்துள்ளது. நீர்இருப்பு : 43.86 டி.எம்.சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 12,776 கன அடியிலிருந்து 7,002 கன அடியாக குறைந்தது.
நீர் வெளியேற்றம் : டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு 14,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 500 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது.