மேட்டூர் அணையின் நீர்வரத்து 684 கன அடியாக குறைந்தது

இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்வரத்து 684 கன அடியாக குறைந்துள்ளது.

Update: 2021-06-02 02:47 GMT

கோப்பு படம்

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8:00 மணி நிலவரப்படி, 97.22 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு  61.29 டி.எம்.சியாக உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 684 கன அடியாக குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு, வினாடிக்கு 2,000 கன அடியாக உள்ளது.

Tags:    

Similar News