மேட்டூர் அணையின் நீர்மட்டம் நிலவரம்
மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
.மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் : 66.45 அடியாகவும்,நீர்இருப்பு : 29.72 டி.எம்.சியாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 5,352 கன அடியாக உள்ளது.
வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.