மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 22,942 கன அடியிலிருந்து 21692 கன அடியாக குறைந்தது.

Update: 2021-07-31 02:45 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி, 81.97 அடியில் இருந்து  82.65 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு :  44.64 டி.எம்.சி.யாக உள்ளது.

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 22,942 கன அடியில் இருந்து 21692 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத் தேவைக்காக வினாடிக்கு 14,000 கன அடி  தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News