மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக, கூடுதலாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இன்று காலை 11 மணி நிலவரப்படி நீர்மட்டம் 81.97 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்இருப்பு 43.94 டி.எம்.சியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 30,199 கன அடியில் இருந்தது, 22,942 கன அடியாக குறைந்துள்ளது. டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக, அணையில் இருந்து, வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது பாசனத்தேவை அதிகரித்துள்ளதால் வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.