மேட்டூர் அணை நீர்வரத்து தொடர்ந்து சரிவு
மேட்டூர் அணையின் நீர் வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.;
மேட்டூர் அணைக்கு வரும் நீரில் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று காலை ௮ மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம்: 97.83 அடி ஆகவும், அணையின் நீர் இருப்பு: 62.06 டி.எம்.சி. ஆகவும் இருந்தது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று 398 கன அடி நீர் என்று இருந்தநிலையில், இன்று அணைக்கு 247 கன அடியாக குறைந்தது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு, வினாடிக்கு 800 கன அடியாக உள்ளது.