மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 195 கன அடியிலிருந்து 184 கன அடியாக குறைந்துள்ளது. நீர் மட்டம் 101.73 அடியாக உள்ளது. நீர் இருப்பு 67.10 டி.எம்.சி ஆக உள்ளது. அணையிலிருந்து குடி நீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.