மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து இறங்குமுகம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு 4,168 கன அடியில் இருந்து 4,098 கன அடியாக குறைந்தது.

Update: 2021-12-30 03:30 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம்,  இன்று காலை 8 மணி நிலவரப்படி, 116.48 அடியாக உள்ளது. நீர்இருப்பு : 87.96 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு,  4,168 கன அடியில் இருந்து 4,098 கன அடியாக குறைந்தது.

மேட்டூர்  அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 15,000  கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக,  வினாடிக்கு 600 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News