மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைப்பு
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
சேலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 10 மணி நிலவரப்படி, 119.00 அடியாகவும், நீர் இருப்பு 91.88 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து 19,146 கனஅடியாக உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 18,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 10 மணியில் இருந்து, 16,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கால்வாய் வழியாக 150 கன அடி வெளியேற்றப்படுகிறது.